ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாரா ஸ்ருதிஹாசன்?

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர், ஸ்ருதிஹாசன், கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை குறைத்துள்ள அவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர், ‘தற்போது நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறீர்களா?’ என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், ‘இல்லை’ என்று முற்றுப்புள்ளி வைத்தார். பிறகு இன்னொரு ரசிகர், ‘நடிப்புத்துறையில் இல்லை என்றால், நீங்கள் என்ன வேலை செய்ய விரும்புவீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், ‘குழந்தைகள் மனநல மருத்துவர் ஆகியிருப்பேன்’ என்றார். அவரது பதில்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Stories: