×

அனுக்கிரகன்: விமர்சனம்

தனது நண்பர் சந்தோஷுக்காக எந்தவொரு உதவியையும் செய்பவர், தொழிலதிபர் கிஷோர். இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பது சந்தோஷின் லட்சியம். ஆனால், அவரது வறுமையான குடும்ப சூழ்நிலையால் லட்சியம் நிறைவேறவில்லை. இந்நிலையில் அவருக்கு திருமணம் நடக்கிறது. பள்ளிக்கு செல்லும் வயதில் மகன் இருக்கிறான். ஒருகட்டத்தில் தனது தந்தையின் லட்சியத்தை அறிந்து கலங்கிய மகன், டைம் டிராவல் மூலம் தந்தையின் பள்ளிக் காலத்துக்கு செல்கிறான். தந்தையின் கடந்த காலத்துக்குள் பயணிக்கும் மகன், எதிர்காலத்துக்கு ஏதாவது செய்தானா என்பது மீதி கதை.

சந்தோஷ் ஆக விஜய் கிருஷ்ணா, கிஷோர் ஆக முரளி ராதாகிருஷ்ணன், சந்தோஷ் மனைவியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன், கிஷோர் காதலியாக தீபா உமாபதி, மகனாக ராகவன் முருகன் நடித்துள்ளனர். அனைவரும் கேரக்டரை உணர்ந்து இயல்பாக நடித்திருப்பது சிறப்பு. ஹேமன் முருகானந்தம், நிஷால் சுந்தர், கிஷோர் ராஜ்குமார், பாரிவாசன் ஆகியோரும் நன்கு நடித்துள்ளனர். சுந்தர் கிரிஷ் எழுதி இயக்கியுள்ளார். கதைக்கேற்ற ஒளிப்பதிவை தந்துள்ளார் வினோத் காந்தி. ரேஹான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். தந்தையின் விருப்பத்தை மகன் நிறைவேற்றும் கதையை ரசிக்கலாம்.

Tags : Anukragan ,Kishore ,Santhosh ,
× RELATED நீச்சல் உடையில் கலக்கிய மாளவிகா