உக்ரைனில் ரஷ்யா சரமாரி குண்டுவீச்சு: கிரிமீயாவை இணைக்கும் முக்கிய பாலம் தகர்ப்பு

கீவ்: உக்ரைனின் கார்கீவ் நகரில் ரஷ்ய படைகள் நேற்று சரமாரியாக குண்டுவீசி தாக்கின. கிரிமீயாவை இணைக்கும் முக்கிய பாலம் சேதமானது. உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர், 8வது மாதமாக நீடிக்கிறது. இந்நாட்டில் கைப்பற்றிய 4 பகுதிகளை சமீபத்தில் தனது நாட்டுடன் ரஷ்ய அதிபர் புடின் இணைத்தார். இந்நிலையில், உக்ரைனின் முக்கிய நகரான கார்கீவ்வில் நேற்று பல்வேறு இடங்களில் ரஷ்ய படைகள் திடீரென சரமாரியாக குண்டுகள் வீசி தாக்கின. இதில், நகரின் முக்கிய மருத்துவ நிறுவனம், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களில் தீப்பிடித்து எரிகின்றன. இதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. இதற்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவுடன் கிரிமீயாவை இணைக்கும் பிரதான மேம்பாலத்தில் உக்ரைன் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. பாலத்தின் மீது சென்ற வெடிகுண்டுகள் நிரப்பிய லாரி வெடிக்க செய்யப்பட்டது. இதில், மூன்று பேர் பலியானார்கள். மேலும், பாலத்தின் ஒரு பகுதி சேதமானது. இந்த குண்டு வெடிப்பின்போது பாலத்தின் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஆண், பெண் என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூன்றாவது நபர் குறித்த விவரங்கள் தெரியவில்லை. ரயில்ேவ தண்டவாளத்தில் சென்ற சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. புதிய தளபதிஉக்ரைனில் சமீப காலமாக ரஷ்ய படைகளுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. இதனால்,  சிரியாவில் ரஷ்ய படைக்கு தலைமை தாங்கி வெற்றியை பெற்று தந்த ஜெனரல் ஜெர்ஜி சுரோவிகினை, உக்ரைன் போரல்  ரஷ்ய படையின் புதிய தளபதியாக ரஷ்ய அதிபர் புடின் நியமித்துள்ளார். …

The post உக்ரைனில் ரஷ்யா சரமாரி குண்டுவீச்சு: கிரிமீயாவை இணைக்கும் முக்கிய பாலம் தகர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: