முதல் கோல்டு ப்ளே பட்டன் வாங்கிய யூடியூப் சேனல்

யூடியூப்பில் சேனல் ஆரம்பித்து, 10 லட்சம் சப்ஸ்கிரைபர்களை அடைந்துவிட்டால் அவர்களைக் கவுரவிக்கும் விதமாக ‘கோல்டு ப்ளே பட்டன்’ எனும் அங்கீகாரத்தை வழங்குகிறது ‘யூடியூப்’ நிறுவனம். இந்த அங்கீகாரத்தைப் பெற்ற முதல் பாகிஸ்தான் பெண்மணி அம்னா ரியாஸ்தான். லாகூரில் உள்ள கட்டுப்பாடான ஒரு சமூகத்தில் பிறந்தவர் அம்னா. 2015ல் விளையாட்டாக ஒரு வீடியோவை எடுத்து யூடியூப்பில் தட்டிவிட்டார். அதற்கே உறவினர்களும், வீட்டில் உள்ளவர்களும் அம்னாவைச் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். சகோதரர் மட்டுமே அம்னாவிற்குத் துணையாக இருந்திருக்கிறார். எதிர்ப்புகளே அவரை சமையல் கலை சார்ந்த ‘கிச்சன் வித் அம்னா’ என்ற சேனலைத் தொடங்க காரணம். ஜூன் 4, 2016ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேனலில் பாகிஸ்தான் மற்றும் இந்திய உணவுகள் உட்பட ஆங்கிலேயர்களின் காலை உணவு, ஆரோக்கிய உணவு வகைகள், சீனா மற்றும் அரேபிய உணவுகள் செய்து காட்டி அசத்துகின்றார். அமெரிக்காவின் நொறுக்குத் தீனிகள், கேக் வகைகள், ஸ்மூத்தீஸ், பானங்கள் என சகல உணவுகளையும் எளிமையான முறையில் பார்வையாளர்களுக்குச் செய்து காட்டுகிறார் அம்னா. இவரது ஒவ்வொரு வீடியோவும் மில்லியன் பார்வைகளை அள்ளுகிறது. 43.2 லட்சம் சப்ஸ்கிரைபர்கள், 60.8 கோடி பார்வைகள், லட்சங்களில் வருமானம் என  யூடியூப் ராணியாக வலம் வருகிறார் அம்னா….

The post முதல் கோல்டு ப்ளே பட்டன் வாங்கிய யூடியூப் சேனல் appeared first on Dinakaran.

Related Stories: