பதார்த்த குணசிந்தாமணி கூறும் மஞ்சள்

நன்றி குங்குமம் ஆன்மீகம்

மங்கலப் பொருட்களில் தலைசிறந்தது மஞ்சள். பொன் நிறமும் நறுமணமும் இதன் சிறப்பு. சகல சுபகாரியங்களிலும் முழு முதற் கடவுளாகிய விநாயகரின் திருவுருவமாக அமைக்க மஞ்சள் உபயோகிக்கப்படுகிறது. சௌபாக்கிய தேவதையான லட்சுமியின் இருப்பிடம் என்று பெண்கள் இதை எப்போதும் மங்களப் பொருளாகத் தன் உடலில் தாங்குவார்கள். உணவுப்பொருட்களிலும் இதற்கு முதல் இடம் உண்டு. மஞ்சளின் இன்றியமையாமையை உணர்த்தலே அரிசியோடு மஞ்சளைக் கலந்து அட்சதை தயாரித்தல், புதிய ஆடைகளை அணியு முன் அவற்றிற்கு மஞ்சள் இடுவது இவைகளை எல்லாம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். கஸ்தூரி மஞ்சள் பூசிக்கொள்ள ஏற்றது. தோளின் நிறத்தைப் பாதுகாக்கக்கூடியது. உடல் வியர்வை நாற்றத்தை அகற்றக் கூடியது.

மஞ்சள் சிறந்த மருந்துப்பொருளாகும். மஞ்சள் தூளைப் பாலில் போட்டுக் காய்ச்சி சாப்பிட்டால் வாய்ப்புண், தொண்டை எரிச்சல் குணமாகும். மஞ்சள் பூசிக்கொள்வதால் கரப்பான், சொறி, சிரங்கு அண்டாது. மஞ்சளை விழுதாக அரைத்து சுடவைத்து பற்றுப் போட வீக்கம் குறையும். கட்டி பழுத்து உடையும். வேப்பிலையுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்து கொப்புளங்கள் மேல் தடவினால் அவை பழுத்து உடையும்.மஞ்சளைப் பற்றி பதார்த்தகுண சிந்தாமணி போன்ற சில நூல்கள் கூறியிருப்பதை இங்கே நோக்குவோம்.

‘மஞ்சள் மலம் இறுக்கும்: மாற்றாகும் நீற்றுக்குக்;

கஞ்ச மலர்வதனக் காந்தியாமல் அஞ்சாமல்

தேன்போலக் காய்ச்சித் தெளிவை இருந்து அருந்த

ஏன் போகா மாந்த சுரம்?’

பொன்நிறமாம் மேனி; புலால் நாற்றமும் போகும்;

மன்னு புருட வசியமாம்; பின்னி எழும்

வாந்தி பித்தம் தோடம் சயம் வாதம்போம் தீபனமாம்

கூர்ந்த மஞ்சளின் கிழங்குக்கு.

இது முருகவேள் திருமுறை சித்து வகுப்புத் தொகுதியிலுள்ள வெண்பா. அகத்தியர் குணபாடம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு:- நாகலட்சுமி

Related Stories: