ஆனந்தம் அருளும் கிருஷ்ணரை எளிமையாக வீட்டிலேயே வழிபாடு செய்வது எப்படி?

கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். கிருஷ்ண வழிபாடு நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கிருஷ்ணனைப் பற்றிய மிகப் பழமை வாய்ந்த ஆதாரம் ரிக்வேதத்தில் உள்ளது.

‘ஆணவம் கூடாது’ என்பதை நரசிம்ம அவதாரமும், ‘பெண்ணாசை கூடாது’ என்பதை ராம அவதாரமும், ‘மண்ணாசை கூடாது’ என்பதை கிருஷ்ண அவதாரமும் இந்த உலகுக்கு உணர்த்துகின்றன. மேலே சொன்ன மூன்று அவதாரங்களுள் கிருஷ்ண அவதாரமே இன்றைக்கு அதிகம் பேசப்படுகிறது.

கிருஷ்ணரை எப்படி எளிமையாக வீட்டிலேயே முறையாக வழிபாடு செய்வது?

ஆவணி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில் அர்த்த ஜாமத்தில் பிறந்தவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். இரவில் பிறந்ததால் கிருஷ்ணரை வழிபட இரவு நேரம் தான் மிகவும் உகந்தது. அந்த வகையில் இவ்வருடம் திங்கட் கிழமையில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நன்னாளை எந்த நேரத்தில் கொண்டாடுவது? வீட்டிலேயே எப்படி கிருஷ்ணரை முறையாக வழிபாடு செய்வது? வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்கிற அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

கோகுலாஷ்டமியில் நைவேத்யம் படைப்பது எப்படி?

கோகுலாஷ்டமியில் கிருஷ்ணரை மையப்படுத்தி அவருக்கு மிகவும் பிடித்தமான பால், தயிர், வெண்ணெய், நெய், முறுக்கு, சீடை, தட்டை, அப்பம், அவல் பாயாசம், அவல் லட்டு, நாட்டு சர்க்கரை, விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றை வைத்து வழிபடுவது சிறப்பு. இதில் அவல் மற்றும் வெண்ணை மிகவும் முக்கியம். எனவே எதுவும் செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டினை வைத்து வழிபட்டாலே கிருஷ்ணருடைய பரிபூரண அருளைப் பெறலாம்.

பூஜையை எப்படி நிறைவு செய்வது?

பூஜைகள் முடிந்த பின்பு குழந்தைகளுக்கு கிருஷ்ண லீலை, கிருஷ்ணன் பிறந்த கதை ஆகியவற்றை கண்டிப்பாக அருகில் அமர வைத்து சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இறை நம்பிக்கையும் மேம்படும். கிருஷ்ணன் அவதரிக்கும் பொழுது தாய், தந்தை ஆகிய தேவகி, வசுதேவரும் உடன் சந்திரனும் மட்டுமே விழித்து இருந்ததாக புராணங்கள் கூறுகிறது.

எனவே ஜன்மாஷ்டமியில் சந்திர தரிசனம் செய்வது எல்லா வகையான நன்மைகளையும் பெற்று தரும். நம் உள்ளத்தையும், உடலையும் தூய்மைப்படுத்தும். பின்னர் கலசத்தை வலது புறமாக நகர்த்தி எல்லாவற்றையும் கலைத்துப் பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். அருகில் இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள், உணவு, உடை, கல்விக்கு உதவி செய்தல் போன்ற தானங்களை செய்து மகிழலாம். இதனால் குழந்தை கிருஷ்ணருடைய அருள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

Related Stories: