தீராத குடும்ப கஷ்டம் தீர வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு..!!

வெள்ளிக்கிழமை எந்த நேரத்தில் அம்பாளை வழிபாடு செய்தால் நம்முடைய குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் சீக்கிரத்தில் தீரும். வெள்ளிக் கிழமையில் சுக்கிர ஓரை வரும். அது எப்போது என்று தெரிந்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை வரும் நேரத்தில் நீங்கள் அம்பாள் கோவிலில் இருக்க வேண்டும். அம்பாளை பார்த்து வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணி வரை சுக்கிர ஹோரை.

வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரை சுக்கிர ஹோரை. இதையும் தவிரனால் வெள்ளிக்கிழமை இரவு 8 லிருந்து 9 மணி வரை சுக்கிர ஹோரை உள்ளது. இந்த மூன்று மணி நேரத்தில் உங்களுக்கு எந்த நேரம் சௌகரியமோ அந்த நேரத்தில் நீங்கள் அம்மன் கோவிலில் அம்மனை பார்த்தவாறு, அம்மனை தரிசனம் செய்ய வேண்டும். குறிப்பாக காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் அம்பாளை தரிசனம் செய்வது, மிகமிக சிறப்பான நேரமாக சொல்லப்பட்டுள்ளது.

வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரையில் அம்மனிடம் வேண்டுதல் வைத்தால் அது உடனடியாக பலிக்கும். ஒரே ஒரு வாரம் இந்த வழிபாட்டை செய்துவிட்டு பலனை எதிர்பார்க்க கூடாது. வாரம்தோறும் தவறாமல் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மனை நம்பிக்கையோடு வழிபாடு செய்து வந்தால் ஐந்திலிருந்து ஏழு வாரத்திற்குள், உங்களின் வேண்டுதலுக்கான வரத்தை அம்பாள் சீக்கிரமே கொடுத்து விடுவாள். அதன் பின்பு உங்களுடைய குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிறைவாக இருக்கும்.

Related Stories: