பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்

நான் அடிக்கடி வேலை மாறிக் கொண்டே இருக்கின்றேன். எந்த வேலையில் சேர்ந்தாலும் திருப்தியின்மையே நிலவுகின்றது. இதனால் வீட்டிலும் வெளியிலும் பிரச்னை நிலவுகின்றது. என்ன செய்வது என்று கூறுங்கள்.

 - சுந்தரமூர்த்தி, விருதுநகர்.

உங்களின் முழுக் கடிதத்தையும் படித்தேன். நீங்கள் உங்களின் துறையில் எவ்வளவு அனுபவம் மிக்கவர் என்பதையும் உணர்ந்தேன். நீங்கள் மீன ராசி மற்றும் மீன லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். பன்னிரெண்டு ராசிகளிலேயே கடைசியாக வருவது மீனமே ஆகும். தனுசு ராசிக்கும், மீன ராசிக்கும் குருவே அதிபதியாகும். இப்படி ராசிநாதனே உத்யோக ஸ்தானாதிபதியான பத்தாம் இடத்திற்கு அதிபதியாக வருகிறார். அதாவது தனுசு குருதான் உங்களின் வேலை ஸ்தானத்தை நிர்ணயிக்கப் போகிறார். ஆனால், உங்கள் ஜாதகத்தில் குருவின் நிலை சரியாக அமையவில்லை. எனவே, தன் வீட்டு வேலையாக இருந்தாலும் பொறுமையாக நிதானமாக செய்யப் பழகுங்கள். முதலில் நீங்கள் அலுவலகத்தில் எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அப்படியே மெதுவாக முயற்சி செய்து வேலையைச் செய்யுங்கள். உங்களின் இஷ்டத்திற்கு எல்லோரும் வளைய மாட்டார்கள். அதனால், நீங்கள்தான் உங்கள் சூழலை அனுசரித்துப் போக வேண்டும். அதனால் சிந்தித்து செயல்படுங்கள். இப்படித்தான் இருக்க வேண்டுமென்று உங்களுக்கென்று நியதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.   ‘‘சீனியர் மோஸ்ட் ஆன நான் இருக்கும்போது வந்து ஆறே மாசம் ஆன அவர்கிட்டப்போய் இவ்ளோ பெரிய பொறுப்பை ஒப்படைக்கறீங்களே. இது நியாயமா’’ என்று மூத்த அதிகாரிகள் முணுமுணுத்தாலும் அதையும் தாண்டி நிர்வாகம் உங்களிடம் சில பொறுப்புகளை

. கவலைப்படாதீர்கள்.

ஒரே மாதிரியான வேலை எப்போதுமே பிடிக்காது. உங்களின் கற்பனைத் திறனை வளர்க்கும் விதமாக ஏதேனும் ஒரு வேலை இருந்து கொண்டே இருக்க வேண்டும். இதனாலேயே, நீங்கள் வேலை மாறிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால், இருக்கும் வேலையிலேயே வித்தியாசமாக என்ன செய்வது என்று யோசித்தபடி இருப்பது நல்லது.  பூரட்டாதி 4ம் பாதத்தில் பிறந்த நீங்கள் சகல விஷயத்தையுமே காத்திருந்து காத்திருந்துதான் அடைவீர்கள். எவ்வளவு பெரிய விஷயமானாலும் அலட்டிக்கொள்ள மாட்டீர்கள். அலுவலகத்தில் எத்தனை பெரிய ரகசியங்கள் இருந்தாலும், தனது இருக்கைக்கு அந்த விஷயம் வரும்வரை பொறுமை காப்பீர்கள். அதனால் கவலைப்படாதீர்கள். எங்கு தவறு நடந்தாலும் உடனடியாக தட்டிக் கேட்பீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் கறாராக இருப்பீர்கள். உங்களுக்கு எதிரான விஷயங்களையெல்லாம் சமயோஜித புத்தியால் வென்று விடுவீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் வியாபாரத்தில் ஆர்வமாக இருந்தால்,  ஐஸ்க்ரீம் கடை, ஜூஸ் கடை, ஒப்பனை பொருட்கள் விற்பனை, நெல், அரிசி மண்டி என்று சில வியாபாரங்களில் ஈடுபடும்போது நல்ல லாபம் கிட்டும்.  உங்களின் வேலை ஸ்தானமான பத்தாம் இடத்திற்கு அதிபதியாக தனுசு குரு வருகிறார். ஆயுதம் ஏந்திய பெருமாளை வணங்குவது நல்லது. சுதர்சன ஆழ்வார் என்கிற சக்கரத்தாழ்வாரை வணங்குவது மிகுந்த நலம் பயக்கும். அதிலும் மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர் எனும் திவ்யதேசத்திலுள்ள சக்கரத்தாழ்வாரை தரிசிக்க வேலைவாய்ப்பு பற்றிய குழப்பங்கள் எளிதாகத் தீரும். இத்தலம் மதுரையிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

 

“திருவருணை”

கிருஷ்ணா

Related Stories: