டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதி: அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: சினிமா டிக்கெட் கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் சிறப்பு அவசர கூட்டம் நேற்று நடந்து. சங்க தலைவர் ரமேஷ் பாபு தலைமை வகித்தார் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம், பொருளாளர் கஜேந்திரன், இணை செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தியேட்டர்களுக்கு சொத்துவரியை குறைக்க வேண்டும். தியேட்டர்களுக்கு தனி அட்டவணையின் கீழ் மின்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். ஆபரேட்டர் நியமன விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும், பெரிய திரையரங்குகளை 2க்கும் மேற்பட்ட சிறிய திரையரங்குகளாக மாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று டிக்கெட் கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ள அரசு அனுமதி அளிக்க வேண்டும். படம் வெளியான 8 வாரங்களுக்கு பின்பே ஓடிடியில் வெளியிட வேண்டும்….

The post டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதி: அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: