பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்க மயிலாப்பூர் மாதவப்பெருமாள்

சென்னை மயிலாப்பூரில் மாதவப்பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த கோவில், 'கலி தோஷம் இல்லாத கோவில்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள மூலவர் மாதவப்பெருமாள், அமர்ந்த திருமண கோலத்தில் அருளுகிறார். இவருக்கு கல்யாண மாதவன் என்ற பெயரும் உள்ளது. அமிர்தவல்லித்தாயார் சுவாமிக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் இங்குள்ள புஷ்கரிணியில் ஒரு மாசி மகத்தன்று குழந்தையாக தோன்றினாள். எனவே இத்தீர்த்தம், 'சந்தான புஷ்கரிணி' என்றழைக்கப்படுகிறது. தாயார் அவதரித்த நாளில் அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் இத்தீர்த்தத்தில் சங்கமித்ததாம். இதன் அடிப்படையில் மாசி மகத்தன்று இங்கு விழா நடக்கிறது.

அன்று ஒருநாள் மட்டும் தாயார், சுவாமியுடன் சேர்ந்து தீர்த்தக்குளத்திற்கு எழுந்தருள்கிறாள். அப்போது தீர்த்த நீராடி, தாயாரை வணங்கிட பாவம் நீங்கி, புண்ணியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள் தாயாருக்கு கல்கண்டு, குங்குமப்பூ, பால் மூன்றும் சேர்ந்த கலவையை நைவேத்யமாக வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால் குழந்தைப்பேறு உண்டாவதாக நம்பிக்கை. ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஐப்பசி சதயம் நட்சத்திரத்தையொட்டி இவருக்கு 10 நாள் திருவிழா நடக்கிறது.

Related Stories: