போதை பழக்கத்திற்கு எதிராக மினி மாரத்தான் போட்டி

திருவொற்றியூர்: ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் மாவட்டம், மணலி சரகம் சார்பில், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, மாத்தூர் எம்எம்டிஏ 2வது பிரதான சாலையில் நேற்று நடைபெற்றது. மணலி உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று 2 மற்றும் 3 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளில் ஓடினர்.போட்டியில் 2 மற்றும் 3ம் இடம் பிடித்த வீரர்களுக்கு கோப்பை மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ்களை செங்குன்றம் துணை காவல் ஆணையர் மணிவண்ணன் வழங்கினார். தொடர்ந்து, போதை பழக்கத்தற்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், எண்ணூர் உதவி ஆணையர் பிரமானந்தன், ஆய்வாளர்கள் சங்கர், சுந்தர் கொடிராஜ் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்….

The post போதை பழக்கத்திற்கு எதிராக மினி மாரத்தான் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: