சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தில் 22ம் தேதி வரை மழை நீடிக்கும்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 22ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் நீடித்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அந்த மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் நீடித்து வருகிறது. அதனால் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 22ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் அதை ஒட்டிய  மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.  நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்….

The post சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தில் 22ம் தேதி வரை மழை நீடிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: