கவுதம் மேனன் இயக்கத்தில் ராம் பொத்தினேனி

ஐதராபாத்: தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள ராம் பொத்தினேனி, நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். இந்நிலையில்தான் லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியர் படத்தில் அவர் நடித்தார். தெலுங்கில் உருவான இந்த படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டது. இந்த படத்தை நேரடி தமிழ் படமாக எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிக்க ராம் பொத்தினேனி முடிவு செய்திருக்கிறார்.சமீபத்தில் ராமை சந்தித்த இயக்குனர் கவுதம் மேனன், அவரிடம் ஒரு கதையை கூறினார். இந்த கதை பிடித்துவிட்டதால் இதில் நடிக்க ராம் ஓகே சொல்லி இருக்கிறார். இந்த படத்தை ஸ்ரவந்தி ரவி கிஷோர் தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதில் நடிக்கும் ஹீரோயின், மற்றும் பிற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. …

The post கவுதம் மேனன் இயக்கத்தில் ராம் பொத்தினேனி appeared first on Dinakaran.

Related Stories: