ஐடி காரிடர் கோட்டத்தில் மின் குறைதீர் கூட்டம்

சென்னை: ஐ.டி காரிடர் கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதுதொடர்பாக தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தரமணி, ஐ.டி காரிடர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 10.30 மணியளவில், செயற்பொறியாளர் அலுவலகம், ஐ.டி காரிடர் அலுவலகம், 1வது தளம், 110 கி.வோ, டைடல் பார்க் துணை மின்நிலைய வளாகம், சி.எஸ்.ஐ.ஆர் ரோடு, தரமணி, சென்னை – 113 அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post ஐடி காரிடர் கோட்டத்தில் மின் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: