ஐப்பசி பரணியில் பைரவருக்கு அன்னப்படையல்

சிவபெருமானின் திருவுருவங்களில் பெருங்காவல் தெய்வமாக விளங்குவது பைரவ கோலமாகும். அவர் நாம் வானத்தில் பயணிக்கும்போது ஆகாச பைரவராகவும், தண்ணீர் (கடல், ஆறுகள்) மீது பயணிக்கும் போது ஜல பைரவராகவும், அக்னி தொடர்பான ஆலைகளில் பணிபுரியும் போது அக்னி பைரவராகவும், பயிர்தொழில் புரியும் போது பூமி பைரவராகவும், காற்றின் நடுவில் பவன பைரவராகவும் வீற்றிருந்த  அருள்பாலிக்கின்றார்.பைரவ மூர்த்தி உலகத்தைக் கட்டிக் காக்கும் காவல் தெய்வமாக இருப்பதால் மகா உக்ர மூர்த்தியாக விளங்குகிறார். அவருடைய படைகளாக யோகினிகளும் வேதாளங்களும் உள்ளனர். பெருமானோடு அவர்களுக்குப் பூஜையும், படையலும் இட்டு வணங்குகிறோம். பைரவருக்குப் பெரும் படையல் எனப்படும் அன்னபாவாடம் இடுவது சிறப்பு வழிபாடாகப் போற்றப்படுகிறது. குறிப்பாகச் சித்திரை பரணியிலும், ஐப்பசி பரணி யிலுமாக இரண்டு முறை பைரவருக்குப் படையலிட்டு வழிபடுகின்றனர். பைரவர் அனேக சமயங்களில் வெளிப்பட்டு அன்பர்களிடம் சென்று படையல் ஏற்கின்றார். என்றாலும், சிறுத்தொண்டரிடம் அவர் சென்று ஏற்ற படையலே புராணங்களில் தனிச் சிறப்புடன் போற்றப்படுகிறது. அப்படிச் சென்ற நாள் சித்திரை பரணியாகும். அதையொட்டியும் போர் நட்சத்திரமான பரணியில் உக்கிர தெய்வங்களுக்கு பெரும் படையலிட்டு வழிபடும் வழக்கம் நெடுங்காலமாக இருப்பதாலும், பரணி நட்சத்திரம் பைரவர் வழிபாட்டிற்கு உரியதாக விளங்குகிறது. சித்திரை பரணி, ஐப்பசி பரணிஆகிய நாட்களில் பைரவரைச் சிறப்புடன் வழிபடுகின்றனர்.உலகில் அன்பும், சமாதானமும் நிலவவும், பகைகள் நீங்கவும், கண்ணுக்குப் புலப்படாத தீமைகள் நீங்கவும் மனதில் அமைதி நிலவும், மன உளைச்சல் நீங்கி மகிழ்ச்சி பொங்கி நிலவவும் இந்த வழிபாட்டைமேற்கொண்டு வருகின்றனர்.

- அருள்ஜோதி

Related Stories:

More
>