டெல்லியில் சகல வசதிகளுடன் கூடிய சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை இன்று திறந்துவைக்க உள்ளார் பிரதமர் மோடி .!

டெல்லி: டெல்லியில் சகல வசதிகளுட கூடிய சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைக்க உள்ளார். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் முக்கோண வடிவிலான பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் போன்றவற்றை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைக்கிறார். ராஜபாதையில் கட்டப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தில் மாநில வாரியான உணவகங்களும், பசுமை நடைபாதைகளும், தோட்டங்களும், பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரையிலான மொத்த வளாகத்தையும் பிரதமர் மோடி இன்று திறந்துவைக்கிறார். இதே போல் கடமைப்பாதை என பெயர் மாற்றப்பட்டுள்ள புதிய ராஜபாதையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையையும் பிரதமர் இன்று திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு டெல்லியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது….

The post டெல்லியில் சகல வசதிகளுடன் கூடிய சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை இன்று திறந்துவைக்க உள்ளார் பிரதமர் மோடி .! appeared first on Dinakaran.

Related Stories: