நகை பிரியர்களுக்கு நற்செய்தி: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.37,560-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.37,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.4,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து   ரூ.58-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்த நிலையில் வாரத்தின் முதல்நாளான சற்று சற்று ஏற்றுத்துடன் தொடங்கியுள்ளது.அனால் இன்று தங்கத்தின் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி கிராம் ரூ.4,750 ஆகவும், சவரன், ரூ.38,000 ஆகவும் இருந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.55 குறைந்த்து ரூ.4,695-ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.38,000- ஆக குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர் சரிவைச் சந்தித்த நிலையில், கடந்த திங்கள்கிழமை கிராம் ரூ.4,765ல் தொடங்கியது.இந்நிலையில் வாரத்தின் முதல்நாளான திங்களன்று தங்கம் விலை கிராமுக்கு 14 உயர்ந்தும், சவரனுக்கு ரூ.112 அதிகரித்தும் விற்பனையானது. நேற்றும் அதேபோல் சவரன் மற்றும் கிராமில் மாற்றம் ஏதுமில்லாமல் விற்பனையாலும், சவரன் ஒன்றுக்கு 38ஆயிரம் ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ 58க்கு விற்கப்படுகிறது. அதேபோல் கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ. 58,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. …

The post நகை பிரியர்களுக்கு நற்செய்தி: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.37,560-க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: