லாத்வியா அருகே நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்த செஸ்னா ஜெட் விமானம்: விமானத்தில் பயணித்த 4 பேரின் நிலை?

லாத்வியா: லாத்வியா அருகே 4 பேருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டின் ஜீரஸ் என்ற விமான நிலையத்தில் இருந்து நேற்று விமானி உள்ளிட்ட நான்கு பேர் செஸ்னா 551 சிறிய வகை ஜெட் விமானத்தில் ஜெர்மனி நோக்கி பயணத்தை தொடங்கினர். இந்த விமானம் ஸ்பெயினை கடந்தபோது திடீரென திசை திரும்பியதாக கூறியுள்ள ஜீரஸ் விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், இதற்கான காரணம் தெரியவில்லை என்றும் கூறினர். இந்நிலையில் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த செஸ்னா விமானம், பால்டிக் கடலில் விழுந்து நொறுங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் திடீரென குறைந்துவிட்டதால் விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் பயணித்த விமானி, இரண்டு பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. லாத்வியா, லிதுவேனியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இருந்து மீட்பு கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விபத்து நடைபெற்ற பகுதிக்கு விரைந்துள்ளன. …

The post லாத்வியா அருகே நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்த செஸ்னா ஜெட் விமானம்: விமானத்தில் பயணித்த 4 பேரின் நிலை? appeared first on Dinakaran.

Related Stories: