கோடையிலும் மின் உற்பத்தி பாதிக்காது முழு கொள்ளளவுடன் ரம்மியமாக காட்சியளிக்கும் எமரால்டு அணை

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள எமரால்டு அணை முழு கொள்ளளவை எட்டி ரம்மியமாக காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி உள்ளிட்ட பல்வேறு அணைகள் உள்ளன. இந்த அணைகளில் உள்ள நீரை கொண்டு 12 நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணைகளில் இருந்து மின் உற்பத்தி மட்டுமின்றி குடிநீர் உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. பருவமழை சமயங்களில் இந்த அணைகள் நிரம்பி விடும்.ஊட்டி அருகேயுள்ள எமரால்டு அணை உள்ளது. இந்த அணையில் உள்ள நீரை கொண்டு குந்தா, கெத்தை, பில்லூர் ஆகிய மின் நிலையங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழை காரணமாக அணையில் ஓரளவிற்கு நீர் இருப்பு இருந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளான எமரால்டு, அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால் அப்பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. எமரால்டு அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து கடந்த மாதம் திறக்கப்பட்டது. அணையில் முழு கொள்ளளவான 184 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. இதேபோல் அப்பர்பவானி, அவலாஞ்சி அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் இம்முறை கோடை சீசன் சமயத்தில் மின் உற்பத்தியிலும் பாதிப்பு இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post கோடையிலும் மின் உற்பத்தி பாதிக்காது முழு கொள்ளளவுடன் ரம்மியமாக காட்சியளிக்கும் எமரால்டு அணை appeared first on Dinakaran.

Related Stories: