லாஸ் ஏஞ்சல்ஸ்: தற்போது 60 வயதாகும் ஹாலிவுட் நடிகர் கீயானு சார்லஸ் ரீவ்ஸ், ஹாலிவுட்டில் உருவான ‘தி மேட்ரிக்ஸ்’, ‘ஜான் விக்’ ஆகிய படங்களின் சீரிஸ்களில் நடித்து பிரபலமானவர். உலகம் முழுவதும் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ‘தி மேட்ரிக்ஸ் 2’ என்ற படத்தில் நியோ என்ற கதாபாத்திரத்தில் கீயானு சார்லஸ் ரீவ்ஸ் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் மொத்தமாக 638 வார்த்தைகள் பேசியுள்ளார்.
பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் ரூ.75 லட்சம் என்று கணக்கிட்டு, மொத்தமாக 450 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளார். இப்படம் வெளியாகி உலக அளவில் 3,000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இதுவரை ‘ஜான் விக்’ படங்களின் 4 பாகங்களில் கீயானு சார்லஸ் ரீவ்ஸ் நடித்துள்ளார். கடந்த 2023ல் வெளியான ‘ஜான் விக் 4’ என்ற படம், உலக அளவில் 3,674 கோடி ரூபாய் வசூல் செய்தது. தற்போது ‘ஜான் விக்’ 5வது பாகத்தில் கீயானு சார்லஸ் ரீவ்ஸ் நடித்து வருகிறார்.