இம்சையில் முடிந்த இன்ஸ்டாகிராம் கள்ளக்காதல் வீட்ல தனியாதான் இருக்கேன் ஜாலியா இருக்கலாம் வாங்க: தொழிலதிபர் ஜட்டியை உருவி பணத்தை பிடுங்கிய கும்பல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருச்சூர் அருகே கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் மிகவும் நெருக்கமானார்கள். தன்னுடைய கணவர் துபாயில் இருக்கிறார் என்றும் தான் மட்டும் வீட்டில் நோய் வாய்ப்பட்ட தாயுடன் தனியாக இருப்பதாகவும் இளம்பெண் கூறியுள்ளார். நீங்கள் என்னுடைய வீட்டுக்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று அந்த தொழிலதிபரிடம் ஆசை காட்டியுள்ளார்.அதை நம்பிய தொழிலதிபர் இரு தினங்களுக்கு முன் இளம்பெண் கூறியபடி, பாலக்காடு அருகே யாக்கரை என்ற இடத்திலுள்ள வீட்டுக்கு சென்றார். அந்த வீடு அதிகமாக ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் அமைந்திருந்தது.அவர் அந்த வீட்டுக்கு சென்றபோது ஒரு இளம்பெண் மட்டும் இருந்துள்ளார். அவர் படுக்கையறைக்கு தொழிலதிபரை அழைத்துள்ளார்.அறைக்குள் சென்றவுடன் திடீரென 5 நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டினர். பின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி வீடியோ, போட்டோ எடுத்துள்ளனர். அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டி, அவர் அணிந்திருந்த 4 சவரன் செயின், செல்போன், ஏடிஎம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், கார், ரூ10 ஆயிரம் பணம் போன்றவற்றை பிடிங்கி கொண்டது. பின்னர் கூடுதல் பணம் கேட்டு அந்தக் கும்பல் அவரை மிரட்டியது.கொடுங்கல்லூரில் உள்ள தன்னுடைய பிளாட்டுக்கு சென்றால் பணம் தருவதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து அவரை காரில் ஏற்றி அந்தக் கும்பல் கொடுங்கல்லூருக்கு அழைத்து சென்றது. ஆனால், வழியில் காரிலிருந்து இறங்கி தப்பித்து ஓடிய அந்த தொழிலதிபர் நேராக பாலக்காடு டவுன் தெற்கு போலீஸ் நிலையத்தில் சென்று புகார் தெரிவித்தார். போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில் கண்ணூரை சேர்ந்த கோகுல் தீப் (29), இவரது மனைவி தேவு (24), கோட்டயம் பாலாவை சேர்ந்த சரத் (24), திருச்சூரை சேர்ந்த அஜித் (20) வினய் (24) மற்றும் ஜிஷ்ணு (20) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கணவன், மனைவியான கோகுல் தீபும், தேவுவும் சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். இந்த கும்பலைச் சேர்ந்த சரத் தான் பெண் போல் தொழிலதிபரிடம் முதலில் சாட்டிங் நடத்தியுள்ளார். தொழிலதிபர் தன்னுடைய வலையில் சிக்கியவுடன் கோகுல் தீப் மற்றும் தேவுவை அணுகிய சரத், பணம் தருவதாக கூறி இந்த மோசடியில் அவர்களை ஈடுபடுத்தியுள்ளார். மற்ற 3 பேரும் சரத்தின் கூட்டாளிகள் ஆவர். விசாரணைக்குப் பின் 6 பேரையும் போலீசார் பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்…

The post இம்சையில் முடிந்த இன்ஸ்டாகிராம் கள்ளக்காதல் வீட்ல தனியாதான் இருக்கேன் ஜாலியா இருக்கலாம் வாங்க: தொழிலதிபர் ஜட்டியை உருவி பணத்தை பிடுங்கிய கும்பல் appeared first on Dinakaran.

Related Stories: