மும்பை: சமந்தாவுடன் விவாகரத்துக்குப் பிறகு, நாக சைதன்யா டிசம்பர் 2024ல் நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல், சமந்தா, ‘தி ஃபேமிலி மேன் 2’, ‘சிட்டாடல்: ஹனி பனி’ போன்ற தொடர்களில் தன்னுடன் பணியாற்றிய இயக்குனர்கள் ராஜ் – டிகே ஜோடியில் ஒருவரான ராஜ் நிடிமோருவுடன் டேட்டிங் செய்கிறார் என்ற செய்தி பரவி வருகிறது.
இப்போது அந்த செய்திகளுக்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு தகவல் பரவியுள்ளது. அதன்படி சமந்தாவின் கை விரலில் வைர மோதிரம் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனால் அவரது ரசிகர்கள் ராஜ் நிடிமோருவுடன் ரகசியமாக சமந்தா நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்று கூறுகிறார்கள். இந்த தகவல் வைரலாகி வருகிறது. ராஜ் நிடிமோர் ஏற்கனவே திருமணமானவர். அவர் தனது மனைவியை பிரிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.