சென்னை: மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த ‘பிரேமம்’ என்ற படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப் படங்களில் நடித்த அவர், தற்போது இந்தியில் 2 பாகங்களாக உருவாக்கப்படும் ‘ராமாயணம்’ என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அமரன்’ என்ற படத்தில் மிகவும் யதார்த்தமாக நடித்திருந்த அவருக்கு பாராட்டும், வாழ்த்தும் குவிந்து வருகிறது.
இந்நிலையில் சாய் பல்லவி அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘ஜார்ஜியாவில் நான் மருத்துவம் படித்த நேரத்தில், தினமும் இரவு 9 மணிக்கு தூங்கி, அதிகாலை 4 மணிக்கு எழுந்து படிப்பேன். இப்பழக்கம் இப்போதும் தொடர்கிறது. இரவு 9 மணிக்கு மேல் படப்பிடிப்பு நடந்தால், அப்பட இயக்குனரிடம் எப்படியாவது அடம்பிடித்து தூங்கச் சென்றுவிடுவேன். இப்படி தூங்குவது எனது உடலுக்கும் நன்கு பழகிவிட்டது. இப்பழக்கத்தை என்னால் மாற்ற முடியவில்லை’ என்றார். சாய் பல்லவியின் விசித்திரமான பழக்கத்தால் இயக்குனர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சாய் பல்லவியை வைத்து இரவு நேர படப்பிடிப்பை நடத்துவதில் சிரமப்படுவதாகவும் கூறப்படுகிறது.