வெள்ளத்தில் மிதக்கும் கொச்சி, பெங்களூர் கேரளா, கர்நாடகாவில் கனமழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெங்களூர், கொச்சி நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.கேரளாவில் கடந்த சில தினங்களாக பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 9 அணைகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது பெய்த அடைமழையால் கொச்சி நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. பெரும்பாலான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எர்ணாகுளம் தெற்கு மற்றும் வடக்கு ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் சிக்னலில் பழுது ஏற்பட்டது. இதனால் மங்களூரு- நாகர்கோவில் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட பல ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சில பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.இதற்கிடையே கேரளா முழுவதும் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று ஒன்றிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல, கர்நாடகாவில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதனால், பெங்களூருவில் பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழையால் மைசூரூ – பெங்களூரு சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது….

The post வெள்ளத்தில் மிதக்கும் கொச்சி, பெங்களூர் கேரளா, கர்நாடகாவில் கனமழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: