சுதந்திரதின உரைக்கு மட்டும்தான் பிரதமரின் ஊழல் ஒழிப்பு உபதேசம்? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை: இதுகுறித்து மநீம மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எடியூரப்பாவை கர்நாடகாவில் மீண்டும் முதலமைச்சாராக்கியதில் தொடங்கி, இன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மை மீது எழுந்துள்ள வெளிப்படையான ஊழல் குற்றச்சாட்டுகளை வேடிக்கை பார்ப்பதுவரையிலான நடவடிக்கைகள் ஊழல் குறித்து பாஜவின் இரட்டைவேடத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது. பிரதமரின், ஊழல் ஒழிப்பு உபதேசம் என்பது சுதந்திரதின உரைக்கு மட்டும்தானா, செயல்பாட்டுக்குக் கிடையாதா. ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மாற்றுக்கட்சியினர் மீதுமட்டும்தானா, சொந்தக்கட்சியினர் மீது கிடையாதா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post சுதந்திரதின உரைக்கு மட்டும்தான் பிரதமரின் ஊழல் ஒழிப்பு உபதேசம்? மக்கள் நீதி மய்யம் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: