ஐதராபாத்: ஒரே சமயத்தில் ‘ராஜா சாப்’, ‘சலார் 2’, ‘ஸ்பிரிட்’ படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இவருக்கு ரேபல் ஸ்டார் என்ற பட்டம் உள்ளது. சமீபத்தில் கமல்ஹாசன் உலக நாயகன் என்ற பட்டத்தையும் அஜித், அல்டிமேட் ஸ்டார் மற்றும் தல ஆகிய பட்டங்களையும் துறந்தனர். அந்த பாணியில் பிரபாசும் பட்டத்தை துறப்பாரா என சிலர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பிரபாஸ் கூறும்போது, ‘பட்டம் போட்டுக்கொள்வது எனக்கும் அசௌகரியமாக படுகிறது. அதில் எனக்கு விருப்பம் கிடையாது. அதை பயன்படுத்த வேண்டாம் என எனது நண்பர்களிடம் சொன்னபோது, ரசிகர்களுக்காக இதை நீ புறக்கணிக்கக் கூடாது என்றனர். என்னை ரபேல் ஸ்டார் என்றும் டார்லிங் என்றும் அழைப்பது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. அதனால் அவர்களுக்காக நான் பட்டத்தை இழக்க விரும்பவில்லை’ என்றார்.