ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் சலவைத் தொழிலாளிக்கு ‘ஈரங்கொல்லி’ என்ற அருளப்பாடு உண்டு. ஸ்ரீ ரங்கநாதர் கோயிலின் உற்சவப் பெருமாள் இஸ்லாமிய மன்னர்கள் படையெடுப்பின்போது விக்ரகத்தை பாதுகாக்கும் பொருட்டு 48 வருடங்கள் திருவரங்கத்தை விட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர், திரும்ப கொண்டு வரப்பட்டார். ஒரு தரப்பினர் இது பெருமாளின் உற்சவ விக்ரகம் என்று ஒரு விக்ரகத்தை கொண்டு வந்தனர். எது உண்மையான விக்ரகம் என்று குழப்பம் நிலவியது. அப்பொழுது இவர்தான் பெருமாளா? என்று சரியாகக் கூற யாருமில்லை. கோயிலார் இக்கோயிலில் பெருமாளின் உடைகளைத் துவைத்துக் கொடுக்கும் சலவைத் தொழிலாளியை அணுகினர். அவர் 90 வயதுப் பெரியவர். கண் சரிவரத் தெரியவில்லை. இவர் எப்படி பெருமாளை அடையாளம் காட்டப்போகிறார் என்று நினைத்தனர் கோயிலில் கூடியிருந்தவர்கள். சலவைத் தொழிலாளி கூறினார்.