முளைப்பாரி இரண்டு வகை

பயறு முளைப்பாரி முதலில் சுமார் 21 முளைப்பாரி 7 கிலோ வைக்கோலை நனைத்து காய வைக்க வேண்டும். அதன் பின்னர் மொச்சைப்பயறு எட்டு கிலோ, மக்காச்சோளம் 2 கிலோ இரண்டையும் தனித்தனி பாத்திரங்களில் பயறுகள் முழுதும் மூழ்கும் வரை ஊறவைக்கவேண்டும். தண்ணிரில் மிதக்கும் சோடப்பயர்களை எடுத்து அப்புறத்த வேண்டும். ஆறு மணி நேரம் கழித்து பாத்திரத்தில் உள்ள தண்ணீரை மாற்றி, அந்த ஈரம் பொதிந்த பயறுகளை காட்டன் துணியில்(வெள்ளை வேட்டித்துணி) வைத்து இறுக கட்டி விட வேண்டும்.

இரண்டாவது நாள் மண்பாத்திரத்தில் நனைத்து வைத்திருந்த வைக்கோலை காற்று புகாத வண்ணன் பொதிய வேண்டும். அதாவது காற்று புகாத வண்ணம். அதனைத் தொடர்ந்து காய்ந்த சாணத்தை துகள்துகளாக தட்டி தூவ வேண்டும். அதன் பின்னர் முளை விட்ட பயர்களை

ஒன்றுபோல் அதே மண் பாத்திரத்தில் விதைக்கவேண்டும்.

இதையடுத்து ஓலை அல்லது ஓடுகளால் வேயப்பட்ட அறையில் வைத்து வெள்ளத்துணியைக் கொண்டு காற்று புகாத வண்ணம் மூட வேண்டும். மூன்றாவது நாள் மேல் பரப்பில் லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும். நான்காவது நாள் லேசாக முளை விட்டிருக்கும். அந்த முளை தெரிந்த பின்பு மூடியிருந்த வேட்டித்துணியை நீக்கி விட வேண்டும்.ஐந்தாவது நாள் சரியாக முளைக்காத தப்பி பயறுகளை நீக்கி விட வேண்டும்.

ஆறாவது நாளும், ஏழாவது நாளும் மூன்று மணி நேர இடைவெளிவிட்டு தண்ணீர் தெளித்துக்கொண்டிருக்க வேண்டும்.

ஏழாவது நாள் முளைப்பாரி ஓரடி வரை நன்றாக வளர்ந்து இருக்கும்.எட்டாவது நாள் முளைப்பாரிக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடக்கும். அப்போது முதலில் தலைவாழை இலை விரித்து இரண்டு தேங்காயை இரண்டாக உடைத்து வைத்து ஒற்ற இலக்கங்களில் வாழைப்பழம், வெற்றிலை பாக்கு மற்றும் அம்மனுக்கு பிடித்த மாவிளக்கு கொழுக்கட்டை,  பச்சரிசி மாவில் வெல்லம் கலந்து வைக்கவேண்டும். மேலும் பானகம் கரைத்து மண்பானையில் வைக்க வேண்டும். அதோடு முளைப்பாரி மீது காதோலை கருமணி கட்டவேண்டும்.(இது தென் மாவட்டம் மற்றும் தேனி, சேலம் மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளன). அதோடு மல்லிப்பூ மாலை சூட்ட வேண்டும். இதனைத் தொடர்ந்து முளைப்பாரியில் கண் திறப்பு நடைபெறும். அப்போது பெண்கள் குலவை இடுவார்கள்.

கண் திறந்தவுடன் அம்மன் சந்நதி முன்பு முளைப்பாரியை எழுந்தருளச் செய்து பெண்கள் அனைவரும் ஒன்றாக கும்மி அடிப்பார்கள். இந்த கும்மிஅடித்தல் முளைப்பாரி தொடங்கிய நாளிலிருந்து தினமும் மாலை நடைபெறும். அதன் பின்பு கன்னிப்பெண்கள் சுமந்து ஊரை வலம் வந்து கோயிலில் இறக்கி விடுவார்கள். கோயில் திருவிழா முடிந்ததும் ஆறு அல்லது கண்மாய் மற்றும் குளங்களில் முளைப்பாரியை பெண்கள் தங்கள் கரங்களால் கரைத்து விடுவார்கள். கரைக்கும் போது அதற்கான பாடலொன்றை பாடி கரைப்பார்கள்.

உருவ முளைப்பாரி சில்வர் குடம் ஒன்றில் அரை குடத்திற்கு மண் போட்டு, சோளம் தட்டை, பருத்தி மாறை அந்தக்குடத்து மண்ணில் ஊன்றி வைக்கோல் போரை திரிபோல பிடித்து குடத்து மண்ணில் நடப்பட்ட மாறுகள் மீது சுற்றி கரிசல் மண்ணைக் கொண்டு பூசி ஒருநாள் முழுவதும் திணைப்பயறை ஊற வைத்து அது முளைவிட்ட பூசவேண்டும். வெள்ளை வேட்டியைக் கொண்டு காற்று புகாத வண்ணம் சுற்ற வேண்டும். மூன்றாவது முளை விட துவங்கும். அன்றிலிருந்து தண்ணீர் தெளிக்க வேண்டும். ஏழாவது நாள் சந்தணம் கொண்டு அம்மன் முகம் போல் உருவம் செய்ய வேண்டும். அதன் பின்னர் பட்டு கட்டி மாலை சாற்றினால் அம்பாளாக அந்த முளைப்பாரி காட்சி தரும். இதுவே உருவே முளைப்பாரி ஆகும்.

தொகுப்பு: சு. இளம் கலைமாறன்

Related Stories: