மும்பை: நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகர் நிக் ஜோன்ஸ் திருமணம் இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்றது. பிரியங்கா சோப்ரா தனது திருமணத்தின்போது ஆளுயுர வைர நெக்லஸ் ஒன்று அணிந்திருந்தார். அதே போன்ற நெக்லஸை மாஜி ஹீரோயின் ரேகா சமீபத்தில் அணிந்து வந்தார். அதுவும் பிரியங்கா சோப்ராவின் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க. இதுதான் சோஷியல் மீடியாவில் இப்போது நெட்டிசன்களால் கடலை போடப்படும் விஷயமாக மாறியுள்ளது. இது தொடர்பாக விசாரித்ததில் பிரியங்கா சோப்ராவின் அதே நகையைத்தான் ரேகா அணிந்திருப்பது தெரியவந்துள்ளது. பிரியங்கா சோப்ராவின் தம்பி சித்தார்த் சோப்ரா. பிரியங்கா சோப்ரா முதலீடு செய்திருக்கும் டேட்டிங் ஆப் மூலம் நடிகை நீலம் உபத்யாயாவுக்கும், சித்தார்த் சோப்ராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சமீபத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.
முன்னதாக தனது திருமணத்தின்போது ரூ50 கோடி மதிப்பிலான அந்த நெக்லஸை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்தார். அந்த நெக்லஸ் மீது ஆரம்பத்திலிருந்தே ரேகாவுக்கு ஒரு கண் இருந்ததாம். இந்நிலையில் ரேகாவை தனது தம்பியின் திருமணத்துக்கு அழைக்க பிரியங்கா சென்றபோது, அந்த நகையை தனக்கு ஒருநாள் அணிவதற்கு கொடுத்தால், அதை அணிந்து உன் தம்பி திருமணத்தில் பங்கேற்பேன் என ரேகா சொல்லியிருக்கிறார். அதற்கு உடனே பிரியங்காவும் சம்மதித்தாராம். இதையடுத்தே அதே நகையை அணிந்து யாருக்கும் நினைவிருக்காது என யோசித்து ரேகா வந்துள்ளார். ஆனால் 2018ல் பிரியங்கா அணிந்த அந்த நகையை மறக்காத நெட்டிசன்கள், இப்போது ரேகாவை ட்ரோல் செய்துவிட்டனர். இதனால் ரேகா அப்செட்டில் இருக்கிறாராம்.