துபாய் கார் ரேஸ் அஜித் அணி வெற்றி

துபாய்: துபாய் 24H கார் ரேஸில், 911 ஜிடி3 ஆர் என்ற பிரிவில், அஜித் குமாரின் ரேஸிங் அணி 3வது இடத்தை பிடித்துள்ளது. ஒட்டுமொத்த ரேஸில் 23வது இடம் பிடித்துள்ளது. 24H சீரிஸ் ரேஸ் என்பது, 24 மணி நேரம் தொடர்ந்து கார் ஓட்ட வேண்டும். ஒரு அணியில் 3 முதல் 4 ஓட்டுநர்கள் இருப்பார்கள். அவர்கள் தலா 6 மணி நேரம் என்ற கணக்கில், 24 மணி நேரம் ஓட்ட வேண்டும். இதனால், அஜித் குமாரின் ரேஸிங் அணி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நேற்று ரேஸ் தொடங்குவதற்கு முன்பு, ஒரு அணிக்காக மட்டுமே அஜித் குமார் கார் ஓட்டுவதாக தெரிவிக்கப்பட்டது. Porsche GT4 போட்டியில் மட்டுமே அஜித் குமார் ஓட்டுநராக பங்கேற்றார்.
துபாயில் போட்டி நடந்ததால், அவரை பார்க்க ரசிகர்கள் கூடினர். 24H சீரிஸ் ரேஸ் முடிந்த நிலையில், அஜித் குமாரின் ரேஸிங் அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது.

இப்போட்டியில் Porsche 911 GT3 Cup (992) 3வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது. மொத்தமாக 568 லேப்கள் ஓட்டியுள்ள நிலையில், 24 மணி நேரத்தில் 26 முறை கார் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அஜித் குமாரின் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்துள்ளது. இப்போட்டியில் Razoon ரேஸிங் அணிக்காக அஜித் குமார் கார் ஓட்டினார். அந்த அணி 17வது இடத்தை பிடித்தது. அஜித் குமாருக்கு இந்திய தேசியக்கொடியுடன் இந்திய ரசிகர்கள் வாழ்த்து சொன்னார்கள். துபாயில் குடியேறியுள்ள மாதவன் நேரில் சென்று, அஜித் குமாரை கட்டிப்பிடித்து வாழ்த்தினார். அப்போது அஜித் குமாரின் குடும்பத்தினரும் இருந்தனர்.

 

Related Stories: