கரும்பு உற்பத்தி அதிகரிக்க எடுத்த நடவடிக்கை என்ன? திமுக எம்பி கேள்வி

புதுடெல்லி: கரும் உற்பத்தி அதிகரிக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என மாநிலங்களவையில் திமுக எம்பி ராஜேஸ்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். ‘சர்க்கரை, வெல்லப்பாகு, பயோடீசல் ஆகிய பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது உண்மைதானா, அப்படியென்றால் கரும்பு உற்பத்தியை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன’ என எம்பி ராஜேஷ்குமார் மாநிலங்களைவையில் கேட்டிருந்தார். இதற்கு ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்த பதிலில், ‘‘சர்க்கரை, வெல்லப்பாகு, பயோடீசல் ஆகியவைக்கு தேவை அதிகரித்து இருப்பது உண்மைதான். இதில் கரும்பு உற்பத்தியை அதிகரிக்க தமிழகம் உட்பட சுமார் 13 மாநிலங்களில் தொழில்நுட்பத்தை விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. லக்னோ மற்றும் கோயம்பத்தூர் ஆகிய இடங்களில் கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றார். இதே போல, ‘தேசிய கைத்தறியின் கீழ் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூலிங் நிறுவப்பட வேண்டுமா? தமிழகத்தில் அத்தகைய நிறுவனங்களை கொண்டு வர ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்க என்ன’ என திமுக எம்பி வில்சன் மாநிலங்களைவையில் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஜவுளித்துறை அமைச்சர் தர்ஷனா, ‘தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகம் உட்பட நாடு முழுவதும் தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனங்களை நிறுவ எந்த ஏற்பாடும் இல்லை. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி மற்று பெண் கைத்தறி தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு திறந்தவெளி பள்ளி படிப்புகளின் சேர்க்கைக்கான கட்டணத்தில் மானியம் வழங்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்….

The post கரும்பு உற்பத்தி அதிகரிக்க எடுத்த நடவடிக்கை என்ன? திமுக எம்பி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: