பெண்ணடிமைத்தனத்தை உடைக்க வேண்டும்: நடிகை ரோகிணி பேச்சு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 5வது புத்தக திருவிழா நடந்து வருகிறது. புத்தக திருவிழாவின் 3வது நாளான நேற்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்று திரைப்பட நடிகை ரோகிணி பேசியதாவது:அதிகம் வாசிப்போரின் மூளை நரம்புகள் புத்துணர்ச்சியோடு இருக்கின்றன. வாசிப்பும் ஒரு வகையான தொழில்நுட்பம். எதை வாசிக்க வேண்டும், எதை வாசிக்கக்கூடாது என்றும் இளைய தலைமுறைக்கு சொல்லித்தர வேண்டும். பொதுவாக யாருக்கோ நடந்த பிரச்னைகளை நாம் தெரிந்து கொள்வது என்பது வெறும் செய்தி மட்டும் தான்.  சுவாரசியமாக கேட்டு விட்டு சென்று விடுவோம். நம்முடைய பிரச்னையை பற்றி யார் பேசியிருக்கிறார்கள், அதற்கான தீர்வை பற்றி யார் பேசியிருக்கிறார்கள் என்பதை தேடி படிக்க வேண்டும்.எல்லா நேரமும் நல்ல நேரம் தான். மனம் நிம்மதியாக, நல்ல எண்ணங்களோடு இருந்தால் அந்த நேரம் எல்லாம் நல்ல நேரம் தான். மற்றவர்களை பற்றி நாம் தவறாக நினைத்தால் அந்த நேரம் தான் கெட்ட நேரம். பெண் குழந்தைகள் படிப்பது என்பது ஒரு காலத்தில் சவாலான காலம். இப்போது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் படிக்க வைக்கிறோம். தடைகளை உடைத்ததால் பெண் கல்வி வாய்த்திருக்கிறது. அதேபோல தான் பெண்ணடிமை தனத்தையும் உடைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்….

The post பெண்ணடிமைத்தனத்தை உடைக்க வேண்டும்: நடிகை ரோகிணி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: