இனப்பெருக்கம் அமோகம் இந்தியாவில் 2,967 புலிகள்: மோடி பெருமிதம்

புதுடெல்லி: இந்தியாவில் புலிகள் இனப்பெருக்கம் அதிகரித்து, நாட்டில் தற்போது 2,967 புலிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. சர்வதேச புலிகள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2012ம் ஆண்டு முதல் இதுவரை இந்தியாவில் 1,059 புலிகள் இறந்துள்ளன. ‘புலிகள் மாநிலம்’ என்ற அழைக்கப்படும் மத்திய பிரதேசத்தில் அதிகப்பட்சமாக இந்தாண்டில் இதுவரையில் 75 புலிகள் பலியாகி உள்ளன,’ என்று கூறப்பட்டுள்ளது.  ஒன்றிய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, மக்களவையில் நேற்று அளித்த புள்ளி விவரத்தில், ‘புலிகள் தாக்கி இறந்த மனிதர்கள் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது, 2,967 புலிகள் வாழ்கின்றன. அதே நேரம், இவற்றை வேட்டையாடுவதும் அதிகமாகியுள்ளது,’ என தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி நன்றி:பிரதமர்  மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘புலிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை பாராட்டுகிறேன். நாட்டில் 75 ஆயிரம்  சதுர கிமீ பரப்பளவில்  52 புலிகள் காப்பகங்கள் உள்ளன என்பது  பெருமைக்குரிய விஷயம். புலிகள் பாதுகாப்பில் உள்ளூர் சமூகங்களை  ஈடுபடுத்தும் வகையில் பல புதுமை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது,’  என்று கூறியுள்ளார்….

The post இனப்பெருக்கம் அமோகம் இந்தியாவில் 2,967 புலிகள்: மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: