ஆபாசம், வன்முறை இல்லாத மழையில் நனைகிறேன்

சென்னை: ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் தயாரித்துள்ள படம், ‘மழையில் நனைகிறேன்’. அன்சன் பால், ரெபா மோனிகா ஜான், ‘சங்கர் குரு’ ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார் நடித்துள்ளனர். கல்யாண் ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார். இயக்குனர் விஜி, கவின் பாண்டியன் இணைந்து எழுதியுள்ளனர். வரும் 12ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து இயக்குனர் டி.சுரேஷ்குமார் கூறியதாவது: கிறிஸ்தவர் அன்சன் பால், இந்து ரெபா மோனிகா ஜான் இருவரும் மழை நாளில் சந்திக்கின்றனர். அவர்களுக்குள் காதல் மலர்கிறது. மதங்கள் பிரிக்காத அவர்களது காதலை யார் பிரித்தது? பிரிந்தவர்கள் இணைந்தார்களா என்பது கதை. மலையாளத்தில ‘ஆபிரஹாமின்டே சந்ததிகள்’ படத்தில் மம்மூட்டியுடன் நடித்து பிரபலமான அன்சன் பால், அவரது ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளனர். ஆபாசம், வன்முறை இல்லாத ரொமான்டிக் எண்டெர்டெயினர் படம். சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. படக்குழுவினரை ரஜினிகாந்த் சார் வாழ்த்தி வீடியோ வழங்கியுள்ளார்.

Related Stories: