ரூ.50 லட்சம் கேட்டு நடிகை அக்‌ஷராவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

பாட்னா: ரூ.50 லட்சம் கேட்டு நடிகை அக்‌ஷராவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள அக்‌ஷரா சிங், இந்தியிலும் போஜ்புரியிலும் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் ஒரு மொபைல் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், 50 லட்சம் ரூபாய் எனக்கு தரவேண்டும். இல்லாவிட்டால் உன்னை கொல்வோம். பணம் கொடுக்க வேண்டிய இடம் பற்றி சீக்கிரமே தெரிவிப்போம். போலீசில் சென்றாலும் உன்னை விட மாட்டோம் என கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அக்‌ஷரா, இது தொடர்பாக பாட்னாவின் தானாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். குறிப்பிட்ட மொபைல் எண்ணை வைத்து விசாரித்ததில் போஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர். அவர்தான் அக்‌ஷராவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் என்பது தெரிந்தது. தொடர்ந்து அவரை பாட்னாவுக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: