நம்மாழ்வார் அவதரித்த திருப்பதிசாரம்

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பார்கள். திருப்பதி செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள திவ்ய தேசங்களுக்கு சென்று பெருமாளை வழிபடுகின்றனர். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை திவ்யதேசங்களில் ஒன்றாக திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் உள்ளது. நாகர்கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில் உள்ளது. திருமாலின் அம்சமாக கருதப்படும் நம்மாழ்வாரை பெற்ெறடுத்த தாய் பிறந்த பெருமை இந்த தலத்திற்கு உரியது. குறுநாட்டு காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும், நாஞ்சில் நாட்டு திருவண்பரிசாரத்தில் இருந்த (திருப்பதிசாரம்) திருவாழிமார்பப்பிள்ளை மகளான உதயநங்கைக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைகள் இல்லை. மனம் வருந்தியவர்கள் மகேந்திரகிரி அடிவாரத்தில் திருக்குறுங்குடி சென்று நம்பியாற்றில் நீராடி நம்பியிடம் குழந்தை வரம் கேட்டனர்.

Advertising
Advertising

அப்போது நம்பி, குழந்தையாக தானே மகனாக பிறப்பதாகவும், பிறந்த குழந்தையை ஆழ்வார் திருநகரியில் உள்ள புளியமரத்தடிக்கு கொண்டு வரும்படி கூறிவிட்டு மறைந்தார். உதயநங்கை கருவுற்று தாய்வீடான திருப்பதிசாரம் வந்தார். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பௌர்ணமி திதியில் நம்மாழ்வார் அவதரித்தார். நம்பிபெருமாளின் ஆணைப்படி, தங்க தொட்டிலில் ஆழ்வார் திருநகரியில் உள்ள புளியமரத்தடிக்கு கொண்டு வந்தனர்.

குழந்தை தவழ்ந்து புளியமர பொந்தில் ஏறி தெற்கு நோக்கி பத்மாசனத்தில் ஞானமுத்திரை ஏந்தியவராய் அங்கு எழுந்தருளிய ஆதிநாதரை தியானித்தது. இவ்வாறு 16 ஆண்டுகள் தவத்தில் பாலமுனி இருந்து ஞானம் பெற்றார். சுசீந்திரம் முன்பு ஞானரண்யம் என அழைக்கப்பட்டது. சப்தரிஷிகள் இங்கு தவமிருந்தனர். இறைவன் சிவ வடிவில் அவர்களுக்கு காட்சி தந்தார். முனிவர்கள் இறைவனை திருமாலின் உருவில் காண சோம தீர்த்தக்கூட்டம் சென்று தவம் செய்தனர்.

அவர்கள் தவத்தை மெச்சிய இறைவன் திருமால் வடிவில் காட்சி தந்தார். அப்போது சப்த ரிஷிகள் வேண்டுகோளை ஏற்று, திருமால் சப்தரிஷிகள் சூழ பிரசன்ன மூர்த்தியாக அருள் புரிவதாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள மூலவர் சிலை ஒன்பது அடி உயரத்துடன் காணப்படுகிறது. கல், சுண்ணாம்புடன், மூலிகைகள் கலந்த கடுகு சர்க்கரை யோகம் என்ற கூட்டினால் உருவாக்கப்பட்டது. அதனால், திருவட்டாறு போல் இங்கும் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவருக்குத்தான் அபிஷேகம். உற்சவராக ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசன் உள்ளார். இங்கு லெட்சுமி தேவி மூலவரின் நெஞ்சில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் தாயாருக்கு தனிசன்னதி கிடையாது. பெருமாள் லெட்சுமி உருவம் பொறித்த பதக்கத்துடன், தங்கமாலை அணிந்துள்ளார். திருமாலின் திருமார்பில் லட்சுமிதேவி நித்தியவாசம் செய்வதால், திருவாழ்மார்பன் என அழைக்கப்படுகிறார். திருவாழ்மார்பன் கருவறையில் 7 அடி உயரத்தில் நான்கு கரங்களுடன் சங்கு சக்கர தாரியாக வலது காலை மடக்கியும், இடது காலை தொங்க விட்டும் கிழக்கு நோக்கி அமர்ந்த ேகாலத்தில் அருள்பாலிக்கிறார்.

Related Stories: