2023 உலக கோப்பைக்கு பின்னர் ஹர்திக் ஓய்வு பெறுவார்: ரவிசாஸ்திரி ஆரூடம்

மும்பை:ஒரு ஆல்ரவுண்டர், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான ஃபார்மட்டிலும் ஆடுவது என்பது இன்றைய சூழலில் மிகக்கடினமான விஷயம். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த 3 ஃபார்மட்டிலும் ஆடுவது மட்டுமல்லாது, ஐபிஎல்லிலும் ஆடுவதால் வீரர்கள் மீதான பணிச்சுமை அதிகரிக்கிறது. அதனால் தான், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:-டெஸ்ட் கிரிக்கெட் எப்போதுமே இருக்கும். ஏற்கனவே வீரர்கள் தாங்கள் எந்த ஃபார்மட்டில் ஆடவேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியாவை எடுத்துக்கொள்ளுங்கள். டி20 கிரிக்கெட்டில் ஆடவேண்டும் என்பதில் பாண்டியா உறுதியாக இருக்கிறார். வேறு எதிலும் ஆடுவதை பற்றி அவர் கவலைப்படவில்லை. அடுத்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா ஆடுவார். அதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விலகிவிடுவார். மற்ற வீரர்களும் தாங்கள் ஆடவேண்டிய ஃபார்மட்டை அவர்களே தேர்வு செய்துகொண்டு, விரும்பாத ஃபார்மட்டிலிருந்து விலகிவிடுவார்கள். அது அவர்களது உரிமை.இவ்வாறு அவர் கூறினார்….

The post 2023 உலக கோப்பைக்கு பின்னர் ஹர்திக் ஓய்வு பெறுவார்: ரவிசாஸ்திரி ஆரூடம் appeared first on Dinakaran.

Related Stories: