வரதராஜன்பேட்டை புனித அலங்கார அன்னை ஆலய தேர்பவனி

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன்பேட்டை புனித அலங்கார அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று அதன் ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 29ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் (சனி) மாலை 6 மணி அளவில் சலேசிய மாநில தந்தை அந்தோணி ஜோசப் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று ஜெயங்கொண்டம் மறைவட்ட அருட்தந்தை அமலதாஸ் முன்னிலையில் திருப்பலிகள் நடைபெற்றது.

Advertising
Advertising

நேற்றுமுன்தினம் இரவு புனித அலங்கார அன்னையின் மின்மலர் ஆடம்பர பெரியதேர் பவனி நடைபெற்றது. விழாவில் மறைவட்ட முதன்மை குரு பாளையம் கோட்டை பிரான்சிஸ், சேவியர் கிளாடியஸ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராஜமாணிக்கம், டோமினிக் சாவியோ, லியோ டோமினிக் நல்லூஸ்  ராஜா, லூர்துசாமி, அன்புநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை வின்சன்ட் ரோட்ஸ் மாணிக்கம் தலைமையில் பங்கு பேரவையினர், கிராம நாட்டார்கள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: