மேட்டுப்பாளையம்-குன்னூர் செல்லும் பர்னஸ் ஆயில் மலை ரயில் டீசல் இன்ஜினாக மாற்றம்: சீனியர் டெக்னீசியன் சாதனை

குன்னூர்: மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மார்க்கமாக ஊட்டிக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரை பர்னஸ் ஆயில் மூலமும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் மூலமும் ரயில் இன்ஜின் இயக்கப்பட்டு வருகிறது. பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்பட்டு வந்த ரயில் இன்ஜின் அதிக அளவில் மாசு ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது.உச்சநீதிமன்றம் பர்னஸ் ஆயில் மூலம் மலை ரயில் இயக்கப்படுவதை மாற்றியமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து பர்சனஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல் இன்ஜினாக மாற்றியமைக்கும் பணியை குன்னூர் ரயில்வே பணியாளர்கள் மேற்கொண்டு வந்தனர். குன்னூர் பணிமனை சீனியர் டெக்னீசியன் மாணிக்கம் தனது முயற்சியில் பர்னஸ் ஆயில் இன்ஜினை தற்போது டீசல் இன்ஜினாக மாற்றம் செய்துள்ளார்.இது குறித்து மாணிக்கம் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக குன்னூர் மலை ரயில் பணிமணையில் பணிபுரிந்து வருகிறேன். 2002ம் ஆண்டு தனியார் நிறுவனம் மூலம் நிலக்கரி நீராவி இன்ஜினை பர்னஸ் ஆயில் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டம் சரி வர செயல்படவில்லை.பின்னர் எனது சொந்த முயற்சியில் நிலக்கரி நீராவி இன்ஜினை பர்னஸ் ஆயில் இன்ஜினாக மாற்றம் செய்து அது வெற்றியடைந்தது. தற்போது பர்னஸ் ஆயில் இன்ஜினை டீசல் இன்ஜினாக மாற்றம் செய்து அதுவும் வெற்றியடைந்துள்ளது. எனவே இனி வரும் காலங்களில் மலை ரயில் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு மாணிக்கம் கூறினார்….

The post மேட்டுப்பாளையம்-குன்னூர் செல்லும் பர்னஸ் ஆயில் மலை ரயில் டீசல் இன்ஜினாக மாற்றம்: சீனியர் டெக்னீசியன் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: