வேலைக்கு வித்திடுவார் வெயில் உகந்த சாஸ்தா

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே மேலநாட்டார்குளம் என்ற கிராமத்தில் வெயிலுக்கு உகந்த சாஸ்தா உள்ளார். இவர் கூரை இன்றியே காட்சியளிக்கிறார். வருடத்துக்கு ஒரு முறை பங்குனி உத்திரம் அன்று இந்த கோயிலில் மிக அதிகமான பக்தர்கள் கூடுவார்கள். அவர் பக்தர்கள் வேண்டிய காரியத்தினை முடித்து வைப்பதால் வருடம் தோறும் பக்தர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த சாஸ்தா அரசு வேலை தருபவர். எனவே இவரின் பக்தர்களில் வாரிசு தாரர்கள் பலர் அரசு வேலையிலும், தொழில் அதிபர்களாகவும் உள்ளனர். இவர்கள் எல்லாம் சேர்ந்து சாஸ்தாவுக்கு கட்டிடம் கட்ட வேண்டும் என முயற்சி செய்தனர். அதற்கு நாள் குறிக்க சென்றபோது சோதிடர். கோயில் விவகாரம் சோழி போட்டு பாருங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி அவர்கள் மலையாள தேசம் சென்று சோளி போட்டுபார்த்தனர்.

அப்போது சாஸ்தாவுக்கு தனது மேனியில் வெயில் பட வேண்டும். ஆகவே வெயிலை தடுத்து எனக்கு கோயில் எழுப்ப வேண்டாம். நான் ஆலமரத்தின் அடியில் இருக்கவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். அதன் காரணமாக இந்த சாஸ்தாவுக்கு கோயில் கட்ட வில்லை. அது மட்டுமன்றி இவ்விடமுள்ள சாஸ்தா வெயிலுக்கு உகந்த சாஸ்தா என்ற நாமத்தோடு அழைக்கப்பட்டார்.

 இன்றும் ஆலமரத்தின் அடியில் பரவார தெய்வங்களோடு மிக பிரமாண்டமான உள்ளார் வெயில் உகந்த சாஸ்தா. திருச்செந்தூர்- திருநெல்வேலி சாலையில் செய்துங்கநல்லூரிலிருந்து 2 கி.மீ தூரம் பயணித்தால் இந்தக்கோயிலை அடையலாம்.

முத்தாலங்குறிச்சி காமராசு

படங்கள்: சுடலைமணி செல்வன், எஸ்.கே. திருப்பதி

Related Stories: