திரிபுராந்தகசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கூவம் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 5ம் தேதி காலை விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. மாலை மூன்றாம் கால யாக பூஜை ஹோமம், நாடி சந்தானம், மற்றும் தீபாரானையும் நடைபெற்றது.இன்று காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கடக லக்கினத்தில் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தகர் சுவாமி மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிறகு தீர்த்தப் பிரசாத விநியோகம் நடைபெற்றது. கோபுர கலசம் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திவைத்தனர். இதில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, ஒன்றிய திமுக செயலாளர் மோ.ரமேஷ், காஞ்சிபுரம் தொண்ட மண்டல ஆதினம் 233-வது பட்டம் ல திருச்சிற்றம்பல தேசிய ஞானப்பிரகாச பரமாசாரிய சுவாமிகள், திருப்பணிச் செம்மல் பன்னிரு திருமறைக் காவலர் குடியேற்ரம் சிவத்திரு ஆ.பக்தவச்சலனார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் சி.லட்சுமணன், கோயில் செயல் அலுவலர் பி.ஜி.பிரபாகரன், தக்கார் எம்.டில்லிபாபு, திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில், மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், எஸ்ஐ இளங்கோ ஆகியோர் ஈடுபட்டனர்….

The post திரிபுராந்தகசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: