சேரிஅய்யம்பேட்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் அடுத்த சேரிஅய்யம்பேட்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காவேரிப்பாக்கம் அடுத்த சேரிஅய்யம்பேட்டை  கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 9ம் தேதி மாலை பகவத் பிரார்த்தனை, சங்கல்பம், புண்ணாக ஹவாசனம், கும்ப ஸ்தானம், அக்னிப் பிரிதிஷ்டை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை, விஸ்வரூபம், கும்ப ஆதாராதனம், ஆகிய நிகழ்ச்சிகளும், தொடர்ந்து கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மூலவர், உற்சவருக்கு, சிறப்பு  அபிஷேகம்  மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. இதில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: