போதிய விலை கிடைக்காததால் கொப்பரை தேங்காய் தேக்கம்; ஒட்டன்சத்திரம் விவசாயிகள் கவலை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் போதிய விலை கிடைக்காமல், கொப்பரை தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள விருப்பாச்சி, சாமியார் புதூர், சின்னகரட்டுபட்டி, பெரிய கரட்டுப்பட்டி, கள்ளிமந்தயம் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் தென்னந்தோப்புகள் உள்ளன. இங்கு விளைவிக்கப்படும் தேங்காய்கள் ஈரோடு, காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது தேங்காயின் விலை குறைந்துள்ளதால், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள விவசாயிகள் தேங்காய்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால், ஒட்டன்சத்திரம், விருப்பாச்சி பகுதியில் சுமார் 100 டன்னுக்கும் அதிகமான கொப்பரை தேங்காய் தேக்கம் அடைந்துள்ளன. கடந்த மாதம் ஒரு டன் கொப்பரை தேங்காய் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது ஒரு டன் கொப்பரை தேங்காய் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதனால், தேங்காய்களை விற்பனை செய்ய முடியாமல், தோட்டங்களிலேயே இருப்பு வைத்துள்ளனர் இதனால், ஒரு ஏக்கருக்கு ரூ.20,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்….

The post போதிய விலை கிடைக்காததால் கொப்பரை தேங்காய் தேக்கம்; ஒட்டன்சத்திரம் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: