சட்னி சாம்பார் வெப்சீரிஸ் விமர்சனம்

ஊட்டியில் பிரபல அமுதா கஃபே ஓட்டலின் உரிமையாளரான நிழல்கள் ரவியின் சாம்பாருக்கு அந்த ஊரே அடிமை. இன்னும் சிலர், அந்த சாம்பார் சாப்பிடுவதற்காகவே ஊட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட அந்த புகழ் பெற்ற ஓட்டலின் உரிமையாளரான நிழல்கள் ரவி, திடீரென படுத்த படுக்கையாகிறார். தனது மகன் கயல் சந்திரனை அழைத்து ஒரு ரகசியம் கூறுகிறார். சென்னையில் தனக்கு அமுதா என்கிற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், தங்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும், சாவதற்குள் அவனை அழைத்து வருமாறு கூறுகிறார்.

உடனே தன் தங்கை கணவர் நிதின் சத்யா உடன் சென்னை புறப்பட்டு, தன் தந்தையின் மூத்த மகனான ரோட்டுக் கடை யோகி பாபுவை கண்டுபிடிக்கிறார். தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வரும் யோகிபாபுவின் சட்னிக்கு அங்கு ஒரு கூட்டமே அடிமையாக இருக்கிறது. தன் தாய் இறந்து போன நிலையில், தங்களை புறக்கணித்த தந்தை மீது கடும் கோபத்தில் இருக்கும் யோகி பாபுவை கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அழைத்து வந்து தந்தையின் ஆசையை நிறைவேற்றுகிறார் சந்திரன்.

அந்த நொடியே தந்தை இறந்து போக, அவருக்கு காரியம் செய்துவிட்டு 16 நாட்களுக்குப் பின் செல்லுமாறு யோகிபாபுவை கட்டாயம் செய்கிறார் சந்திரன். தந்தையின் இரண்டாவது மனைவி மற்றும் மகள் குடும்பத்தினர் அவரை ஏற்றார்களா, பிடிப்பு இல்லாமல் தங்கும் யோகி பாபு, தன் தந்தையை மன்னித்து அவரது குடும்பத்தை ஏற்றாரா என்பது தான் கதை. யோகி பாபு என்றாலே காமெடிதான். அதையும் மீறி, தனது இயல்பான நடிப்பாலும் நம்மை கவர்கிறார்.

தம்பியாக வரும் கயல் சந்திரனும், தங்கையாக வரும் மைனா நந்தினும், மைத்துனராக வரும் நிதின் சத்யாவும் கொடுத்த வேலையை படு கச்சிதமாக செய்திருக்கிறார்கள். சந்திரன் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கும் சார்லி மகளாக வரும் வாணி போஜனின் நடிப்பும், அவரது தந்தை சார்லின் கதாபாத்திரமும் மனதைத் தொடுகிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான அன்பை சொல்லும் படங்களை எடுத்த ராதாமோகன், அதே பாணியை இந்த வெப்சீரிஸிலும் பயன்படுத்தி ஜொலிக்கிறார்.

The post சட்னி சாம்பார் வெப்சீரிஸ் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: