முழுத்தேங்காய் நிவேதனம்

சீர்காழி, நாகை

நாகை மாவட்டம், சீர்காழி சட்டைநாதர் கோயிலில் மூலவராக  சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.

உற்சவராக சோமஸ்கந்தரும், தாயாராக  பெரியநாயகி, திருநிலைநாயகி உள்ளனர். தல விருட்சமாக பாரிஜாதம், பவளமல்லி உள்ளது.  மகாவிஷ்ணுவின் தோலைச் சட்டையாகப் போர்த்திய சட்டைநாதர் திருமேனி சிறப்புடையது. இவருக்கு முழு தேங்காய் நிவேதனம் செய்யப்படுவது  இத்தல சிறப்பு.

சீர்காழி பிரமபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகை மாவட்டத்தில்  அமைந்துள்ளது. இத்தலம் சம்பந்தரின் அவதாரத் தலம் எனப்படுகிறது. சம்பந்தர் ஞானப்பால் உண்டமை, பிரமன் வழிபட்டமை, புறாவடிவில் வந்த  அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பது தொன்நம்பிக்கை. திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்‘  என்று உலகம் உய்யத் திருப்பதிகம் பாடியது இத்தலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத்  தலங்களில் அமைந்துள்ள 14வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14வது தேவாரத்தலம் ஆகும். திருவாசகத்  திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.

பிரம தீர்த்தம், காளி தீர்த்தம், சூல தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், வைணவ தீர்த்தம், ராகு தீர்த்தம், ஆழி தீர்த்தம், சங்க தீர்த்தம், சுக்கிர தீர்த்தம், பராசர  தீர்த்தம், அகத்திய தீர்த்தம், கவுதம தீர்த்தம், வன்னி தீர்த்தம், குமார தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கேது தீர்த்தம், அண்ட தீர்த்தம்,  பதினெண்புராண தீர்த்தம், புறவ நதி, கழுமல நதி, விநாயக நதி ஆகிய 22 தீர்த்தங்கள் உள்ளன.

பிரமன், குருபகவான், திருமால், சிபி சக்கரவர்த்தி, காளி, பராசர முனிவர், உரோமச முனிவர், ராகு, கேது, சூரியன், அக்னி, ஆதிசேடன்,  வியாசமுனிவர், முருகப் பெருமான், பந்தர், அப்பர், சுந்தரர் ஆவர். ஆகமமாக பஞ்சரத்திரமும், பாடல் வகையாக  தேவாரமும் உள்ளது. இதனை  சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடியதாக வரலாறு கூறுகிறது. இதன் தொன்மை  2000 வருடங்களுக்கு முற்பட்டதாகும். இத்திருத்தலம் தேவாரப்பாடல்  பெற்ற 274 தலங்களில் 14வது தேவாரத்தலம் ஆகும். பிரம்மபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி,  கொச்சைவயம், கழுமலம் என பல்வேறு பெயர்களைத் தாங்கியதாக இந்தத் தலம் இருக்கிறது.

Related Stories:

>