ஆரூற்று பாறையில் ஆலோசனைக் கூட்டம் ஆட்கொல்லி யானையை விரைந்து பிடிக்க கோரிக்கை வாழ்வாதார பிரச்னைகளுக்காக போராட திட்டம்

கூடலூர் :  கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆரூற்று பாறை,பாரதிநகர், எல்லமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று பொதுமக்கள் இணைந்து நேற்று ஆலோசனை கூட்டங்கள் நடத்தினர். ஆரூற்று பாறை சுற்றுவட்ட பகுதியில் காட்டு யானைகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புகள், ஓவேலி பகுதி வாழ் மக்களின் நிலப்பிரச்னை,மின் இணைப்பு, அடிப்படை வாழ்வாதரம் உள்ளிட்ட  பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பொதுமக்கள் இணைந்த ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.கடந்த மாதம் 26ம் தேதி ஆரூற்று பாறை பஜாரில் டீ கடை நடத்திவந்த ஆனந்த் என்பவரை காட்டு யானை தாக்கி கொன்றது.ஆரூற்று பாறை சுற்றுவட்ட பகுதிகளான பாரதிநகர், பெரியார் நகர், சுபாஷ்நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த பல மாத காலமாக  சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை இரவு நேரங்களில்  ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றது. யானையை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர்.காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறை உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.சம்பந்தப்பட்ட ஆட்கொல்லி ஆணையை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓவேலி பகுதி மக்களின் நிலப் பிரச்னை உள்ளிட்ட வாழ்வாதார பிரச்னைகளுக்கு விரைவான தீர்வு காண வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொது மக்களை ஒருங்கிணைக்கும் வாட்ஸ் அப் குழு அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்: ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்களை கிராம ரீதியாக ஒன்றிணைத்து அதன் மூலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு இப்பகுதி மக்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க ஒன்றிணைந்து செயல்படுவது என்றும், அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து ஒருங்கிணைப்பு குழு மூலமாக ஆர்.டி.ஓ, கலெக்டர், தமிழக முதல்வர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து இப்பகுதி மக்களின் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்துவது என்றும். அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக பொது மக்களை திரட்டும் இந்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு பகுதியாக நடத்தப்பட்டு வருவதாக  வருவதாகவும் தெரிவித்தனர்….

The post ஆரூற்று பாறையில் ஆலோசனைக் கூட்டம் ஆட்கொல்லி யானையை விரைந்து பிடிக்க கோரிக்கை வாழ்வாதார பிரச்னைகளுக்காக போராட திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: