தொண்டு நிறுவனம் என்ற பெயரில் ஏழைகளுக்கு உதவி செய்வதாக கூறி பலரிடம் 96 லட்ச ரூபாய் சுருட்டல்: பெண், வாலிபர் எஸ்கேப்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வி.எம்.நகரில் வசித்து வருபவர் ஆர்.கீதா (57). இவர் சில வருடங்களுக்கு முன்புதான் வி.எம்.நகரில் புதிய வீடு கட்டி குடியேறியுள்ளார்.  இவரது மகன் கிஷோர். இவர் பெங்களூரூவில் வேலை பார்த்து வருகிறார். கடந்தாண்டு திம்மபூபாலபுரம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் கீதாவை அணுகியுள்ளார். தன்னுடன் தேன்மொழி என்பவரையும் அழைத்துவந்து திருவள்ளூரில் உள்ள தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு உதவிகள் செய்வதாகவும் அவரிடம் இருந்த புகைப்படங்களை காண்பித்துள்ளார். அப்போது தனது பிள்ளைகள் படிப்பு செலவுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் பணம் தேவைப்படுகிறது என்று அவர்கள் கேட்டுள்ளனர்.இதையடுத்து ஏழைகளுக்குத்தானே கேட்கிறார் என்று கீதா, 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்த நிலையில், தேன்மொழியிடம் கீதா தனது பணத்தை கேட்டபோது 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ரவிச்சந்திரனிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘தன்னிடம் தான் கொடுத்துள்ளார். வந்து தந்துவிடுகிறேன்’ எனச் சொல்லி அந்த பணத்தை இருவரும் கீதா வீட்டிற்கு வந்து கொடுத்துள்ளனர். இதன்பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் கீதாவின் வீட்டிற்கு வந்த ரவிச்சந்திரன், தேன் மொழி ஆகியோர் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்காக ஆடு, கோழி,  வழங்கும் ப்ராஜக்ட்டை தான் எடுத்துள்ளதாகவும் அதற்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது.  நீங்கள் கொடுத்தால் அதற்கான வட்டியை கொடுத்துவிடுகிறோம்’ என்று கேட்டுள்ளனர். இதையடுத்து கீதா, இரண்டு தவணையாக 22 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். இதுதவிர மேலும் பணம் தேவைப்படுவதாக  கூறியதால் உறவினரின் 25 சவரன் நகை ஆகியவற்றையும் கீதா கொடுத்துள்ளனர்.இவற்றை பெற்றுக்கொண்ட தேன்மொழி, ‘ப்ராஜக்ட் வேலையில் ஈடுபடுவதாக அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இதனை நம்பிய கீதாவிடம் அடுத்த வாரமே பணம் பற்றாக்குறையாக உள்ளது.  இதனை கட்டாவிட்டால் ப்ராஜக்ட் நின்றுவிடும் போல் இருக்கிறது என்றும் மேலும் பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய கீதா, உறவினரான கோஷல் என்பவரிடம் 33 லட்சமும் வீட்டு அருகில் வசிக்கும் வி.கே.மணி என்பவரிடம் வங்கி பணப் பரிவர்த்தனை மூலம் 5லட்சமும் 8.4.2022 அன்று 8 லட்சமும் கொடுத்துள்ளார். கீதாவின் உறவினரான திருவள்ளூர் நேதாஜி சாலையில் உள்ள நித்யா என்பவரிடம் 23 லட்சம் வாங்கி கொடுத்துள்ளார். இவ்வாறு வாங்கிய பணத்துக்கு பாண்டு பத்திரத்தில்கையெழுத்துபோட்டு கொடுத்துள்ளார். இதற்கு சாட்சியாக ரவிச்சந்திரனும் கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த மே மாதம் பெங்களூரூவில் இருந்து மகன் கிஷோர் தொலைபேசியில் தாயிடம் பேசும்போது, ‘தனியார் தொண்டு நிறுவனம் மூலம் ஆடு, கோழி வழங்கும் திட்டம் எதுவும் ஐஆர்சிடிஎஸ். தொண்டு நிறுவனம் மேற்கொள்ளவில்லை ஏன் பணத்தை கொடுத்து ஏமாந்தீர்கள்’ என்று கேட்டுள்ளார். இதனால் பயந்துபோன கீதா தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தேன்மொழி, ரவிச்சந்திரன் ஆகியோரின் செல்போன்கள் சுவீட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து திம்மபூபாலபுரம் கிராமத்துக்கு சென்று விசாரித்தபோது தேன்மொழி, ரவிச்சந்திரன் ஆகியோர் மாயமானது தெரிந்ததும் கீதா அதிர்ச்சி அடைந்தார். அதே பகுதியில் உள்ள நாராயண ராஜா என்பவரும் 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்தது தெரிய வந்தது. இதையடுத்து கீதா, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். தேன்மொழி, ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்….

The post தொண்டு நிறுவனம் என்ற பெயரில் ஏழைகளுக்கு உதவி செய்வதாக கூறி பலரிடம் 96 லட்ச ரூபாய் சுருட்டல்: பெண், வாலிபர் எஸ்கேப் appeared first on Dinakaran.

Related Stories: