டான்செட் நுழைவுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: டான்செட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: எம்பிஏ படிப்பிற்கு 21,557 பேர், எம்சிஏ படிப்பிற்கு 8,391 பேர், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்பிற்கு 6762 பேர் என மொத்தம் 36,710 பேர்  டான்செட் நுழைவுத் தேர்வு எழுதினர். முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்படி மாணவர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளம் சென்று முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் நாளை (10ம் தேதி) முதல் வருகிற 30ம் தேதி வரை மதிப்பெண் பட்டியலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post டான்செட் நுழைவுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: