கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருடியவர் கைது

பெரம்பூர்: பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சாகுல் அமீது (45), கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 2வது மெயின் ரோட்டில் எண்ணெய் கடை நடத்தி வருகிறார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 12ம் தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் சாகுல் அமீது கடையை மூடிவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்த ரூ.40 ஆயிரம் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து கொடுங்கையூர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (21) என்பவரை ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் 1வது தெருவை சேர்ந்த மாதவன் (எ) ஆளவந்தான் (20) என்பவரை நேற்று கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: