கனமான கணபதி

பெங்களூரு புனே நெடுஞ்சாலையில் தோப்சாம்பூர் எனும் கிராமத்தில் அனைவரும் வியக்கும் வகையில் மிக உயரமான விநாயகர் சிலை உள்ளது.‘சீன்மாயா கணதீஷ்’ என்று அழைக்கப்படும் இந்த விநாயகரின் உயரம் 100 அடி அகலம், 60 அடி காங்கிரீட்டினால் ஆன இச்சிலையை நிர்மாணிக்க ஆன செலவு ரூ.80/ லட்சம் எனப்படுகிறது. 10,000 சிமெண்ட் மூட்டைகளும் 70 டன் இரும்புக் கம்பியும் கொண்டு இந்த விநாயகரை உருவாக்கியிருக்கிறார்கள்.

இளஞ்சிவப்பு வண்ணத்தில் காட்சி தரும் இவரை நான்கு கி.மீ. தூரத்திலிருந்தும் கூட தரிசிக்கலாம். ஐந்து தலைநாகம் குடை பிடிக்க, மிக அற்புதமாகக் காட்சி தரும் இந்த விநாயகருக்கு மேற்கூரை கிடையாது. உலகிலேயே மிகப்பெரிய ‘மெகா விநாயகர்’ என்று போற்றப்படுகிறார்.

Related Stories: